Monday, July 28, 2025

Best Real Estate in Ranipet ( Vel Real Estate and Academy )


 முக்கியச் செய்தி

போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர் ஒப்புதல். சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது!
பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக் கொண்டு இழந்த சொத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கலாம்! நிலத் தகராறு,
பட்டா மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள்.
நீங்கள் பதிவு இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு,
உங்கள் நண்பர்களுக்கு தகவலை தெரிவிக்கவும்.
(Land Disputes)
1. வழக்கு நிலுவையில் இருக்கும் போது
பட்டா மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது.
நில நிர்வாக ஆணையர் - கடித எண் - K3/27160/2018, dt - 13.3.2018
சென்னை உயர்நீதிமன்றம் - W. P. No - 24839/2014, dt - 16.7.2018
W. P. No - 491/2012, dt - 4.6.2014
W. P. No - 16294/2012, dt - 4.4.2014
2. சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால்,
அவரிடமே சொத்தின் உரிமை மூலம் இருப்பதாகக் கருத வேண்டும்.
மற்றவர்களுக்கு பட்டா மாறுதல் செய்தால் அது தவறு.
S. A. No - 313 & 314/2008, dt - 11.2.2019
3. விஏஓக்கள் திருட்டுத்தனம் குறித்து ஆய்வு செய்ய,
ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும்.
தவறு செய்யும் விஏஓக்களை
பணி நீக்கம் செய்ய வேண்டும்.
W. P. No - 13916/2019, dt - 1.7.2019
4. சொத்தின் உரிமையாளர் யார் என்பதை
வருவாய்த் துறையினர் தீர்மானிக்க முடியாது.
உரிமை இயல் நீதிமன்றத்திற்கே அந்த அதிகாரம் உள்ளது.
W. P. No - 18489/2009, dt - 1.7.2011
5. பட்டா உரிமையைக் காட்டக்கூடிய ஆவணம் கிடையாது.
பதிவு ஆவணம் எதுவும் இல்லாமல் பட்டாவை வைத்து மட்டும் ஒருவர் தான்தான் உரிமையாளர் என்று கூற முடியாது.
S. A. No - 84/2006, dt - 1.9.2015 மதுரை உயர்நீதிமன்றம்
6. பட்டா சொத்தின் உரிமையை காட்டக்கூடிய ஆவணம் கிடையாது.
பட்டாவை வைத்து சொத்தில் உரிமை ஏதும் கோர முடியாது.
S. A. No - 2060/2001, dt - 2.11.2012
S. A. No - 1715/1989, dt - 25.6.2002
W. P. No - 16294/2012, dt - 3.4.2014
7. கிராம நத்தம் நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது.
நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வீடு கட்டிக் குடியிருந்து வருபவர்களுக்கு
பட்டா வழங்க வேண்டும்.
Madras High Court
W. P. No - 18754, 20304, 2613/2005
DT - 4.11.2013
A. K. Thillaivanam Vs The District collector, Chennai Anna District (2004 - 3 - CTC - 270)
The executive officer, Kadathur town panjayath Vs V. S. Swaminathan (2012 - 2 - CTC - 315)
8. பட்டா பெயர் மாற்றம் செய்ய
நீண்ட காலதாமதம் செய்தால் அந்த அதிகாரிக்கு தண்டம் விதிக்கப்படும்.
W. P. No - 19428/2020, dt - 6.1.2021 (K. A. Ravichandran Vs The District collector, Vellore and others)
9. போலி பட்டா வழங்கும் அதிகாரிகளை
பணி நீக்கம் செய்ய வேண்டும்.
W. P. No - 11279/2015, dt - 22.3.2019, madurai high court
10. பட்டாவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வட்ட ஆட்சியருக்கே அதிகாரம் உண்டு. வருவாய் கோட்ட ஆட்சியா்
பட்டா மாற்றம் செய்ய முடியாது. ஆனால், கோட்ட ஆட்சியா் முதல் மேல்முறையீடு அலுவலர் ஆவார்.
T. R. தினகரன் Vs RDO (2012 - 3 - CTC - 823)
அம்சவேணி Vs DRO மதுரை. W. P No - 16294/2012...
கடந்த பல ஆண்டுகளாக, சென்னை உயர்நீதிமன்றம், தில்லி உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் வழங்கிய, இதுபோன்ற தீர்ப்புகளை, பதிவுகளை

Vel Real Estate and Academy ( Best Real Estate Academy in Vellore and Ranipet )


 வாடகை வீட்டில் குடியிருந்தால் அந்த வீடு உங்களுக்கே சொந்தமாகுமா

வாடகை வீட்டில் குடியிருக்கும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்.
சட்ட ரீதியில் பிரச்சினைகளை சந்திக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
சொத்து பற்றிய தகவல்கள்!
இன்றைய காலகட்டத்தில் சொத்துகள் மற்றும் அது தொடர்பான விதிமுறைகள் பற்றி தெரிந்துகொள்வது அவசியமான ஒன்றாகும்.
அதேபோல, வீடு அல்லது இடத்தை வாடகைக்கு விடுவது பற்றிய விதிமுறைகளும் மிக முக்கியம்.
ஏனெனில், இன்றைய காலகட்டத்தில் வாடகைக்கு விட்டு சம்பாதிப்பது என்பது ஒரு நல்ல வருமான ஆதாரமாக மாறியுள்ளது.
ஆனால் சில சட்ட அபாயங்களும் இதில் உள்ளன.
இவற்றில் மிக முக்கியமானது பாதகமான உடைமைச் சட்டம்.
இது நில உரிமையாளரின் அலட்சியம் காரணமாக செயல்படுத்தப்பட்டால் குத்தகைதாரர் அல்லது அங்கீகரிக்கப்படாத குடியிருப்பாளர் உங்கள் சொத்தின் உரிமையைக் கோரலாம்.
பாதகமான உடைமை என்றால் என்ன
பாதகமான உடைமை (Adverse Possession) என்பது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து நடைமுறையில் உள்ள ஒரு பழைய சட்டக் கோட்பாடாகும்.
ஒரு நபர் ஒரு சொத்தை 12 ஆண்டுகளாக உரிமையாளரின் அனுமதியின்றி தொடர்ந்து வைத்திருந்து, அந்த நேரத்தில் சொத்தின் உண்மையான உரிமையாளர் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், உடைமையில் உள்ள நபர் சொத்தின் சட்டப்பூர்வ உரிமையைப் பெறலாம்.
நிபந்தனைகள் முக்கியம்!
இந்தக் கொள்கையின் உண்மையான நோக்கம் என்னவென்றால், அவற்றின் உரிமையாளர்களால் உரிமை கோரப்படாமல் விடப்பட்ட சொத்துக்களைப் பயன்படுத்துவதாகும்.
ஆனால் இன்றைய பார்வையில் இது பெரும்பாலும் சர்ச்சையாகவும், சொத்து இழப்புக்கு ஒரு காரணமாகவும் மாறிவிடுகிறது.
பாதகமான உடைமையை கோருவதற்கு சில கடுமையான சட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
இப்படி இருக்க வேண்டும்!
உடைமை பொதுவில் இருக்க வேண்டும். அதாவது, குடியிருப்பாளர் சொத்தை ரகசியமாக அல்லாமல் பொதுவில் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
உடைமை தொடர்ச்சியாகவும் தடையின்றியும் இருக்க வேண்டும்.
ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் முழு 12 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
உடைமை உரிமையாளரின் அனுமதியின்றி இருக்க வேண்டும்.
குத்தகைதாரர் வாடகை ஒப்பந்தத்தின் கீழ் வாழ்ந்தால் அது பாதகமான உடைமையாக கருதப்படாது.
உடைமை உரிமையாளரின் அதிகாரத்திற்கு எதிராக சொத்தைப் பயன்படுத்தியதையும், தானே அதன் உரிமையாளராக இருப்பது போல் சொத்தைப் பயன்படுத்தியதையும் குடியிருப்பாளர் நிரூபிக்க வேண்டும்.
வீட்டு உரிமையாளரின் சொத்து பாதுகாப்பு!
பாகமான உடைமை போன்ற சட்டங்களிலிருந்து தங்கள் சொத்தைப் பாதுகாக்க வீட்டு உரிமையாளர்கள் எடுக்க வேண்டிய பல முன்னெச்சரிக்கைகள் உள்ளன.
முதலாவதாக, ஒவ்வொரு குத்தகைதாரருடனும் எழுதப்பட்ட மற்றும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் வாடகை ஒப்பந்தம் போட வேண்டும்.
அதற்கான ஆவணம் வைத்திருக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தை 11 மாதங்களுக்குத் தயாரித்து அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும்.
இது குத்தகைதாரர் உரிமையாளரின் அனுமதியுடன் சொத்து வைத்திருப்பதை நிரூபிக்கிறது.
ஆவணங்கள் முக்கியம்!
வீட்டு உரிமையாளர்கள் அவ்வப்போது தங்கள் சொத்தை ஆய்வு செய்ய வேண்டும்.
வாடகை ரசீதுகள், மின்சாரம் மற்றும் தண்ணீர் பில்கள் மற்றும் வேறு ஏதேனும் ஒப்பந்தங்கள் போன்ற குத்தகைதாரருடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் ஏதேனும் சட்ட தகராறு ஏற்பட்டால் இந்த ஆவணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சட்ட ரீதியிலான சிக்கல்கள்!
இந்திய நீதிமன்றங்கள் பொதுவாக பாதகமான உடைமை தொடர்பான வழக்குகளை தீர்ப்பதில் எச்சரிக்கையாக இருக்கும்.
குடியிருப்பாளர் தேவையான அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தாரா என்பதில் நீதிமன்றம் சிறப்பு கவனம் செலுத்தும்.
வீட்டு உரிமையாளர் உடைமையின் காலத்தில் வாடகை வசூலித்திருந்தால் அல்லது நீதிமன்றத்தில் சொத்துக்கான தனது உரிமைக்கான ஏதேனும் ஆதாரத்தை சமர்ப்பித்திருந்தால் குடியிருப்பாளரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிடும்.
குடியிருப்பவருக்கு ஆதரவு!
இருப்பினும், உரிமையாளர் நீண்ட காலமாக சொத்தின் மீது எந்தக் கட்டுப்பாட்டையும் பயன்படுத்தவில்லை என்பதும், குடியிருப்பாளர் முழு சொத்தையும் உரிமையாளரைப் போலவே பயன்படுத்தியதும் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் குடியிருப்பாளருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த வழக்குகள் உள்ளன.
குத்தகைதாரர்கள் செய்ய வேண்டியது!
நீங்கள் ஒரு குத்தகைதாரராக இருந்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு சொத்து உங்களுடையதாகிவிடும் என்று நினைத்தால், அது அவ்வளவு எளிதல்ல.
பாதகமான உடைமையை கோருவது என்பது ஒரு சிக்கலான சட்ட செயல்முறையாகும், அதில் நீங்கள் சில விஷயங்களை நிரூபிக்க வேண்டும்.
நீங்கள் தொடர்ந்து 12 ஆண்டுகளாக சொத்தை வைத்திருக்க வேண்டும்.
உரிமையாளர் ஒருபோதும் ஆட்சேபிக்க கூடாது. நீங்கள் சொத்தை பொதுவில் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
இதில், மின்சார-தண்ணீர் பில்கள், சொத்து வரி மற்றும் பிற ஆவணங்கள் தேவையான ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Vel Real Estate & Academy ( Best Real Estate Academy In Vellore and Ranipet )


 இன்னொருவர் பெயரில் இருக்கும் வீடு அல்லது நிலம் வாங்கும் போது, எதிர்காலத்தில் உரிமை சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க, கீழ்காணும் விஷயங்களை கட்டாயமாக சரிபார்க்க வேண்டும்:

---
1. இடைத்தரகர் இருந்தாலும் நேரடியாக உரிமையாளரை சந்திக்க வேண்டும்.
🔹உரிமையாளர் உண்மையாக இருக்கிறாரா என்று ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யவும்.
2. பூரணமான சட்ட ஆவணங்கள்:
🔹பட்டா, சிட்டா, ஃபிரா / அடங்கல், EC (Encumbrance Certificate) – குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் வரை.
🔹Sale Deed (முந்தைய விற்பனைச் சாசனம்)
🔹பிளான் அப்ப்ரூவல் (Building Approval)
🔹Completion Certificate / Occupancy Certificate (புதிய கட்டிடங்களுக்கு)
3. அனைத்து வரி ரசீதுகள்:
🔹வீட்டின் நகராட்சி/பேரூராட்சி/வட்டாட்சியர் வரி ரசீதுகள்
🔹மின் இணைப்பு / நீர் வசதி / கழிவுநீர் வரி ரசீதுகள்
4. EC (Encumbrance Certificate):
🔹நிலத்தில் கடன், காசோலை, வழக்கு, பிணைபற்றுதல் போன்ற சிக்கல்களில்லையா என்பதை சரிபார்க்க.
5. நில உரிமையின் தெளிவு:
🔹உரிமை மரபுரிமையா அல்லது விற்பனையா என்பதைக் கண்டறியவும்.
🔹துணை உரிமையாளர்கள் இருக்கிறார்களா? அவர்களிடம் ஒப்புதல் உள்ளதா?
6. சட்ட ஆலோசகர் மூலம் ஆவண ஆய்வு:
🔹அனைத்து ஆவணங்களும் ஒரு வக்கீல் (Advocate) மூலம் பரிசீலிக்கப்பட வேண்டும்.
7. வங்கி கடன் பெற வழி உள்ளதா?
🔹வங்கி லோன் கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்ள அது ஏற்கப்படும் நிலமாக இருக்கிறதா எனவும் பார்க்க.
8. நில உரிமை அடிப்படை நிலை:
🔹நிலம் புள்ளி வரைபடம் (Survey Map) மற்றும் FMB sketch அடிப்படையில் சரியாக உள்ளதா?
9. ஆதார், பான் கார்டு:
🔹விற்பனையாளர் அடையாள ஆவணங்களை சரிபார்க்க.
10. சட்டபூர்வ பத்திர பதிவு:
🔹விற்பனை ஒப்பந்தம் (Sale Agreement) செய்து, பின்பு பதிவு அலுவலகத்தில் (Sub-Registrar) சேல் டீட் பதிவு செய்தல்.
---
முக்கியம்:
ஒவ்வொரு நிலமும் தனிப்பட்ட சட்ட நிலையை கொண்டிருக்கிறது. எனவே, பணம் கொடுக்கும் முன், ஆலோசகர் உதவியுடன் முழுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.
P.Elumalai
VEL REAL ESTATE & ACADEMY
Cell : 8248673040

Vel Real Estate and Academy ( Best Real Estate company in Ranipet )

 

தரமான மனு எப்படி எழுதுவது ❓
* தவறாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்வது எப்படி?
* UDR பட்டா தவறுகளை திருத்தம் செய்வது எப்படி?
தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 பிரிவு 11-ன் கீழ் மனு.
மனுதாரர்:
பெறுநர்:
வருவாய் வட்டாட்சியர் அவர்கள்,
வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்,
---------------தாலுகா,
--------------மாவட்டம்.
பொருள்: தோராய பட்டாவை மாற்றி நிரந்தர பட்டா வழங்க கூடாது என்று ஆட்சபனை தெரிவித்தல் தொடர்பாக.
பார்வை:
1.UDR க்கு முன் கிரையம் பெற்ற கிரைய ஆவண எண் : --------, நாள்: ------.
2. --------- ஆம் ஆண்டு முதல் ---------- ஆம் ஆண்டு வரை உள்ள வில்லங்க சான்று.
3. தோராய பட்டா எண்:---------, நாள்:---------.
4 . பட்டாவை ரத்து செய்ய கோரி கோட்டாட்சியர் அவர்களுக்கு பட்டா பாஸ் புக் சட்டம் 1983 பிரிவு 12 கீழ் அனுப்பிய மனு நகல்.
5. போலி பத்திரத்தை ரத்து செய்ய பதிவுத்துறை தலைவர் அவர்களுக்கு அனுப்பிய புகார் மனு நகல்.
மதிப்பிற்குரிய வட்டாட்சியர் அவர்களுக்கு.
1. நான் தினக்கூலி செய்து சுயசம்பாத்தியத்தில் நில உடமை மேம்பாட்டு திட்டத்திற்கு (UDR) முன்பே என் வாரிசுகளுக்காக பார்வை 1 ல் கண்டவாறு " அ " பதிவேட்டிற்கு முன்பு 1958 ஆம் ஆண்டு அசல் கிரையம் பெற்றேன்.
2. மேற்படி இடத்தின் உரிமையாளரை காட்டும் வகையில் பார்வை 2- இல் கண்டவாறு 1958 ஆம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு வரை வில்லங்க சான்று எனது பெயரில் தான் உள்ளது.
3. ஆனால் பார்வை 3 ல் கண்டவாறு --------------- வட்டாட்சியர் சொத்தில் சட்டப் பூர்வ உரிமையில்லாத வேறு நபருக்கு தோராய பட்டா (எண்:-----) வழங்கி இருக்கிறார்.
4. மேலும் தோராய பட்டாவை ரத்து செய்ய வேண்டி பார்வை 4 ல் கண்டவாறு கடந்த ------------------ஆம் தேதி பட்டா பாஸ் புக் சட்டத்தின் கீழ் வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு மனு அளித்துள்ளேன்.
5. மேலும் பட்டாவை வைத்து பத்திரம் பதிவு செய்ய கூடாது என்றும், பட்டாவை வைத்து யாரும் நிலத்தின் உரிமை கோர முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல் தோராய பட்டாவை வைத்து பார்வை 5 இல் கண்டவாறு பதிவு செய்யத பத்திரத்தை ரத்து செய்ய வேண்டி பதிவு துறை தலைவர் அவர்களுக்கு மனு அளித்துள்ளேன்.
ஆட்சபனைக்கான காரணங்கள்
1. சொத்தின் உரிமையாளர் என்ற வகையில் என்னிடம் எந்த வகையான விளக்கம் கேட்காமலும், எந்தவிதமான அறிவிப்பு வழங்காமலும் வேறு நபருக்கு தோராய பட்டா வழங்கியிருப்பது சட்டப்படி குற்றமாகும், மேலும் இந்திய அரசியலமைப்பு சாசனம் 1950 பிரிவு 14 மற்றும் 21 இன் படி அடிப்படை உரிமைக்கு எதிரான செயலாகும்.
2. இந்திய அரசியலமைப்பு சாசனம் 1950 பிரிவு 14 & 21 ல் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி பட்டா வழங்குவதற்கு முன் நிலத்தின் உரிமையாளராகிய எனக்கு நீதிக்குட்பட்டு அறிவிப்பு கொடுக்காமலும், வாய்ப்பு அளிக்காமலும் என் தரப்பு வாதத்தை கேட்காமலும் பட்டா வழங்கியிருப்பது சட்டப்படி குற்றமாகும்.
3. இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950 பிரிவு 375 ன்படி அரசு பணியாளரின் இத்தகைய செயலானது இந்திய அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரான செயலாகும்.
4. மேலும் கிராம நிர்வாக அலுவலர் வருவாய் நிலை ஆணை எண் 31 மற்றும் கிராம நிர்வாக நடைமுறையை விதியை பின்பற்றாமல் பட்டா வழங்க பரிந்துரை செய்துள்ளது இந்திய தண்டனைச் சட்டத்தின் படி குற்றமாகும்.
5. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 மற்றும் தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள் 1987 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை கடைப்பிடிக்காமல் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
6. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 ன் பிரிவு 3(7) ன்படி நிலத்தில் அக்கறை கொண்டுள்ள எனக்கு முறையீடு செய்ய போதிய வாய்ப்பு வழங்காகது மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1994 இன் படி மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமைக்கு எதிராக செயலாகும்.
7. தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள் 1987 ன் விதி 3 (1) ன் படி சம்பந்தப்பட்ட கிராமத்தில் பட்டா வழங்குவது குறித்து அறிவிப்பு மற்றும் படிவம் – 1 வழங்கப்படவில்லை.
8. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 ன் பிரிவு 7 ல் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றாமல் பட்டா வழங்கியிருப்பது இயற்கை நீதிக்கு எதிரான மற்றும் சட்ட விரோதமாகன செயலாகும்.
*எனவே கனம் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் மேற்படி மனு மீது உரிய விசாரணை செய்து சட்டத்திற்கு புறம்பாக வழங்கிய தோராய பட்டாவை ரத்து செய்ய பரிந்துரை செய்ய வேண்டியும், தோராய பட்டாவை மாற்றி நிரந்தர பட்டா வழங்க கூடாது என்று தங்கள் முன்னிலையில் இந்த மனுவை சமர்ப்பிக்கிறேன்.
நாள்:
இடம்:
இப்படிக்கு
மனுதாரர்
ப.ஏழுமலை
வேல் ரியல் எஸ்டேட் & அகாடமி
செல் : 8248673040

Best Real Estate in Ranipet


 தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வரும் மே 31க்குள் ஜமாபந்தி நடத்தி முடிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவு

ஜமா பந்தி கான லிங் தேவை உள்ள நபர் பயன்படுத்தி கொள்ளவும்.🖕
ஜமாபந்தி- பற்றி உங்களுக்கு பயன்படக்கூடிய 15 தகவல்கள்
**********
1.ஜமாபந்தி, ஆண்டு தோறும் மே, சூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால்கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை(AUDIT) முறையாகும்.
2.இம்முறை ஜமாபந்தி என்ற பெயரால் இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
3.இந்த வருவாய் தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்மற்றும் கிராம நிருவாக அலுவலர்ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
4.இதில் விவசாய நில பட்டா மாறுதல் கோரி, நத்தம் பட்டா மாறுதல் கோரி, வீட்டு மனை பட்டா மாறுதல் கோரி, நில அளவை செய்யக்கோரி, நிலஉட்பிரிவு கோரி மனு செய்யலாம்
5.பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பத்துடன் கிரயப்பத்திரம், மூலப்பத்திரம், வில்லங்க சான்றிதழ் இணைத்து வழங்கினால் அனைத்து ஆவணங்களும் கிராம கணக்கும் சரியாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக பட்டா மாறுதல் செய்யப்படுகிறது.
6.வீட்டுமனை இல்லாதவர்கள் இலவச வீட்டுமனை கேட்டும் விவசாய நிலம் இல்லாத ஏழைகள் ஒடுக்கப்பட்டவர்கள் இலவச நிலம் கேட்டு விண்ணப்பிக்கலாம்
7.ஜமாபந்தியில் எல்லா அதிகாரிகளையும் ஒரே நாட்களில் சந்திக்கலாம்.சாதாரண அலுவல் நாட்களில் இவை இயலாத விடயம்
8.ஜமாபந்தியில் நம்முடைய மனுக்கள் கையெழுத்தாக வேண்டிய ஒவ்வொரு டேபிளுக்கும் உடனுக்கு உடனே நகர்ந்து விடும்.மற்ற அலுவல் நாட்களில் சீக்கிரம் டேபிள் டூ டேபிள் நகராது.
9.ஜமாபந்தியில் பொதுமக்கள் பணிகள் மட்டுமே முதன்மை பணி..பிற அலுவல் நாட்களில் வேறு வேறு பணி சுமைகளில் மூழ்கி இருப்பர்.
10.ஜமாபந்தியில் வரும் மனுக்களுக்கு கையூட்டு தொல்லைகள் இருக்காது.
11.ஏழை விவசாயிகளுக்கு போக்குவரத்து ,அலைச்சல், அதிகாரிகள் நேரடி ஆய்வு போன்ற நேர, பண விரயங்கள் குறையும்.
12.Proactive (Asset Builders) சொத்து சேர்ப்பவர்கள் ஆண்டுதோறும் வரும் ஜமாபந்தியை உங்கள் சொத்து பராமரிப்பதற்கான வாரமாக ஒதுக்கி கொள்வது நல்லது
13.ஜமாபந்தியிலும் அங்கங்கே குறைகளும் தவறுகளும் நடக்கின்றன.அரசு ஊழியர்கள் கொஞ்சம் பொறுப்பெடுத்தால் பொதுக்களுக்கு மிக பயனுள்ள தேவையான திட்டம் இந்த ஜமாபந்தி ஆகும்
14.ஜமாபந்தியை ஆண்டுக்கு ஒரு முறை என்பதில் இருந்து இரண்டு முறை என்று மாற்றினால் மிக சிறப்பாக இருக்கும்.
15.தமிழத்தின் அனைத்து தாலுகாக்களிலும் மே &ஜுன் மாதங்களில் ஏதாவது 10 நாட்கள் ஜமாபந்தி நடக்கும். சனி,ஞாயிறு,திங்கள்,அரசு விடுமுறை நாட்ககளில் ஜமாபந்தி நடக்காது.
ப.ஏழுமலை
வேல் ரியல் எஸ்டேட் & அகாடமி
செல் : 8248673040

Best Real Estate Company in Ranipet


 

Best Real Estate Company in Ranipet